தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான குமரி அனந்தன், வயது 93. வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி (08-ம் தேதி இரவு ) காலமானார்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர் 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான அரிகிருச்சுணன் மற்றும் தங்கம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருட்டிணன். பின்னாளில் அவர் “குமரி அனந்தன்” என்று அழைக்கப்பட்டார்.
“போய் வாருங்கள் அப்பா… உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்” – மறைந்த குமரி ஆனந்தனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்.
குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி:
கடந்த ஆண்டு விடுதலை நாள் விழாவில் அய்யா குமரி அனந்தன் அவர்களுக்குத் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கிய தருணத்தில், அவர் என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு உறவாடிய நினைவுகள் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்க – அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினேன்.

அவரைப் பிரிந்து வாடும் அருமைச் சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். தகைசால் தமிழர் அய்யா குமரி அனந்தன் அவர்களது பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி:
காந்தியவாதி, மூத்த நாடாளுமன்றவாதி, புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதி, எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் மறைந்த குமரி அனந்தன் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் தனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.